سَلۡ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ كَمۡ ءَاتَيۡنَٰهُم مِّنۡ ءَايَةِۭ بَيِّنَةٖۗ وَمَن يُبَدِّلۡ نِعۡمَةَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ٢١١
211. (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக: ‘‘எத்தனை தெளிவான அத்தாட்சிகளை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.'' (அவ்வாறிருக்க) எவரேனும் அவை தன்னிடம் வந்ததன் பின் அல்லாஹ்வின் (அத்தாட்சிகளான) அருட்கொடையை மாற்றிவிடுவாரானால் (அவரை) வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன் ஆவான்.
தஃப்ஸீர்
2.211. தூதரே! இஸ்ராயீலின் மக்களைக் கண்டிக்கும்விதமாக அவர்களிடம் கேளும், :தூதர்களை உண்மைப்படுத்தக்கூடிய எத்தனையோ தெளிவான சான்றுகளை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றானே! நீங்கள் அவற்றை பொய் எனக்கூறி புறக்கணித்துவிட்டீர்கள். அல்லாஹ்வின் அருட்கொடையை தெளிவாக அறிந்தபின்னரும் அதனை நிராகரிப்பாக மாற்றுபவர்கள் அறிந்துகொள்ளட்டும், ;நிச்சயமாக அல்லாஹ் தன்னை நிராகரிப்பவர்களை கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன் என்பதை.