وَٱلَّذِينَ يُمَسِّكُونَ بِٱلۡكِتَٰبِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ إِنَّا لَا نُضِيعُ أَجۡرَ ٱلۡمُصۡلِحِينَ ١٧٠
170. எவர்கள் இவ்வேதத்தை(ச் சிறிதும் மாற்றாது) பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகிறார்களோ அத்தகைய சீர்திருத்தவாதிகளான நல்லவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை.
தஃப்ஸீர்
7.170. வேதத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு அதன்படி செயல்பட்டு தொழுகையை அதற்குரிய நேரங்கள், நிபந்தனைகள், வாஜிபுகள் மற்றும் சுன்னத்துகளுடன் முறையாக நிறைவேற்றுபவர்களுக்கு அல்லாஹ் அவர்களின் செயல்களுக்கான கூலியை வழங்கிடுவான். நற்செயல் புரிபவர்களின் கூலியை அவன் வீணாக்க மாட்டான்.