حَقِيقٌ عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ قَدۡ جِئۡتُكُم بِبَيِّنَةٖ مِّن رَّبِّكُمۡ فَأَرۡسِلۡ مَعِيَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ١٠٥
105. ‘‘நான் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை நிச்சயமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆதலால், (நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் சந்ததிகளை என்னுடன் அனுப்பிவை'' (என்றும் கூறினார்.)
தஃப்ஸீர்
7.105. மூஸா கூறினார்: “நான் அவனது தூதராக இருப்பதால் அவன் மீது உண்மையைத் தவிர வேறு எதையும் கூறாமல் இருப்பதற்கு உகந்தவனாவேன். நான் உண்மையாளன், அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களின்பால் அனுப்பப்பட்டுள்ள தூதர் என்பதற்கான தெளிவான ஆதாரத்துடன் நான் உங்களிடம் வந்துள்ளேன். இஸ்ராயீலின் மக்களை சிறையிலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் விடுவித்து என்னுடன் அனுப்பிவிடுங்கள்.”