وَلَا تَأۡكُلُواْ مِمَّا لَمۡ يُذۡكَرِ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَإِنَّهُۥ لَفِسۡقٞۗ وَإِنَّ ٱلشَّيَٰطِينَ لَيُوحُونَ إِلَىٰٓ أَوۡلِيَآئِهِمۡ لِيُجَٰدِلُوكُمۡۖ وَإِنۡ أَطَعۡتُمُوهُمۡ إِنَّكُمۡ لَمُشۡرِكُونَ ١٢١
121. (நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாத வற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இணைவைத்து வணங்குபவர்கள்தான்!
தஃப்ஸீர்
6.121. முஸ்லிம்களே! அல்லாஹ் பெயர் கூறி அறுக்கப்படாததை உண்ணாதீர்கள். அவனல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டாலும் அல்லது யாரினுடைய பெயரும் கூறப்படாவிட்டாலும் சரியே. அதனை உண்பது அல்லாஹ்வுக்கு அடிபணியாது மாறுசெய்வதாகும். இறந்தவற்றை உண்ணும் விடயத்தில் உங்களிடம் தர்க்கம் புரியுமாறு, ஷைத்தான்கள் தங்களின் தோழர்களிடம் சந்தேகங்களை ஏற்படுத்துகிறார்கள். முஸ்லிம்களே! இறந்தவற்றை உண்ணுவதை அனுமதிப்பதற்காக அவர்கள் ஏற்படுத்தும் சந்தேகங்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நீங்களும் அவர்களும் ஷிர்க்கில் சமமாகி விடுவீர்கள்.