ஸூரா Al-An'am, வசனம் 112

6:112

وَكَذَٰلِكَ جَعَلۡنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوّٗا شَيَٰطِينَ ٱلۡإِنسِ وَٱلۡجِنِّ يُوحِي بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٖ زُخۡرُفَ ٱلۡقَوۡلِ غُرُورٗاۚ وَلَوۡ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرۡهُمۡ وَمَا يَفۡتَرُونَ ١١٢

112. இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் மனிதரிலும், ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக்கி இருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றுவதற்காக அழகான வார்த்தைகளை (காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். உமது இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டுவிடுவீராக.

தஃப்ஸீர்

6.112. இந்த இணைவைப்பாளர்களின் எதிர்ப்பைக் கொண்டு நாம் உம்மை சோதித்தது போலவே உமக்கு முன்னர் எல்லா தூதர்களையும் சோதித்தோம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் குழப்பக்கார மனிதர்களிலிருந்தும் ஜின்களிலிருந்தும் எதிரிகளை ஏற்படுத்தினோம். அந்த எதிரிகள் ஒருவர் மற்றவருக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தினார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக அசத்தியத்தை அலங்கரித்துக் காட்டினார்கள். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடினான். அவர்களையும் அவர்கள் இட்டுக்கட்டும் அசத்தியத்தையும் நிராகரிப்பையும் விட்டுவிடுவீராக. அவர்களைப் பொருட்படுத்தாதீர்.