ஸூரா Al-An'am, வசனம் 111

6:111

۞ وَلَوۡ أَنَّنَا نَزَّلۡنَآ إِلَيۡهِمُ ٱلۡمَلَٰٓئِكَةَ وَكَلَّمَهُمُ ٱلۡمَوۡتَىٰ وَحَشَرۡنَا عَلَيۡهِمۡ كُلَّ شَيۡءٖ قُبُلٗا مَّا كَانُواْ لِيُؤۡمِنُوٓاْ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ يَجۡهَلُونَ ١١١

111. (அவர்கள் விரும்புகின்றவாறு) மெய்யாகவே நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை (எழுப்பி) அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், (மறைவாயிருக்கும்) அனைத்தையும் அவர்கள் (கண்) முன் கொண்டு வந்து சேர்த்தாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள், ஆனால் அல்லாஹ் நாடினாலே தவிர. அவர்களில் பெரும்பான்மையினர் (அறிவில்லாத) மூடர்களாகவே இருக்கின்றனர்.

தஃப்ஸீர்

6.111. அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு பதிலளிக்குமுகமாக அவர்களிடம் வானவர்களை இறக்கி, இணைவைப்பாளர்கள் அவர்களைக் கண்ணால் கண்டாலும், இறந்தவர்கள் அவர்களுடன் பேசி, நீர் கொண்டு வந்ததுதான் உண்மை என்பதை அவர்கள் இணைவைப்பாளர்களுக்கு எடுத்துக் கூறினாலும், அவர்கள் விரும்பிய எல்லா சான்றுகளையும் நாம் அவர்களுக்கு வழங்கி கண் முன்னால் அவர்கள் அவற்றைக் கண்டாலும் அவர்களில் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர எவரும் நீர் கொண்டு வந்ததன் மீது நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். மாறாக அவர்களின் பெரும்பாலோர் மூடர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்குவதற்கு அவர்கள் அவன் பக்கம் செல்வதில்லை.