Rabbij'alni muqimas-salah

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

رَبِّ ٱجۡعَلۡنِي مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِيۚ رَبَّنَا وَتَقَبَّلۡ دُعَآءِ ٤٠

40. என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக!

தஃப்ஸீர்

14.40. இறைவா! என்னையும் என் சந்ததியினரையும் சிறந்த முறையில் தொழுகையை நிறைவேற்றக் கூடியவர்களாக ஆக்குவாயாக. எங்கள் இறைவா! என் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பாயாக. அதனை உன்னிடத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக ஆக்குவாயாக.

رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ ٤١

41. எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்கு நிறைவேறுகின்ற (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!'' (என்று பிரார்த்தித்தார்.)

தஃப்ஸீர்

14.41. எங்கள் இறைவா! என் பாவங்களை மன்னித்து விடுவாயாக. என் தாய் தந்தையரின் பாவங்களையும் விசாரணை செய்ய தங்களின் இரட்சகனுக்கு முன்னால் நிற்கும் நாளில் நம்பிக்கையாளர்களின் பாவங்களையும் மன்னித்து விடுவாயாக. (இது அவருடைய தந்தை அல்லாஹ்வின் எதிரி என்பதை அறிவதற்கு முன்னர் அவர் செய்த பிரார்த்தனையாகும். அவருடைய தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவான பின்னர் அவரை விட்டும் நீங்கிவிட்டார்).

ஸூரா Ibrahim முழுவதையும் ஓதுங்கள்

கேள்விகள்

Rabbij'alni muqimas-salah குர்ஆனில் எங்கே உள்ளது?

Rabbij'alni muqimas-salah ஸூரா Ibrahim, 14:40-41 இல் உள்ளது.