ஸூரா At-Takwir, வசனம் 8

81:8

وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ٨

8. அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்,

தஃப்ஸீர்

81.8,9. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையிடம் (உன்னைக் கொன்றவன் எந்த குற்றத்திற்காக கொன்றான் என்று) அல்லாஹ் கேட்கும்போது.