فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمۡ أُجُورَهُمۡ وَيَزِيدُهُم مِّن فَضۡلِهِۦۖ وَأَمَّا ٱلَّذِينَ ٱسۡتَنكَفُواْ وَٱسۡتَكۡبَرُواْ فَيُعَذِّبُهُمۡ عَذَابًا أَلِيمٗا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا ١٧٣
173. ஆகவே, எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற் செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு முழுமையாக அளித்து, தன் அருளால் மென்மேலும், அவர்களுக்கு அதிகப்படுத்துவான். எவர்கள் கர்வம் கொண்டு (அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைக்) குறைவாகக் காண்கின்றனரோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குத் துணை புரிபவர்களையும் உதவி புரிபவர்களையும் (அங்கு) அவர்கள் காணமாட்டார்கள்.
தஃப்ஸீர்
4.173. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதர்களை உண்மைப்படுத்தி, அல்லாஹ்வுக்காக தூய்மையான எண்ணத்துடன் அவன் காட்டிய முறையில் நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அவர்களின் செயல்களுக்கான கூலியை குறைவின்றி நிறைவாக வழங்கிடுவான். அவர்களுக்கு தன் அருளிலிருந்தும் உபகாரத்திலிருந்தும் இன்னும் அதிகமாகவும் வழங்குவான். பெருமை மற்றும் கர்வம் காரணமாக அல்லாஹ்வை வணங்குவதையும் அவனுக்குக் கட்டுப்படுவதையும் விட்டு தவிர்ந்து கொண்டவர்களுக்கு அவன் வேதனைமிக்க தண்டனையை அளித்திடுவான். அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குப் பயனளிக்கும் பாதுகாவலனையோ அவர்களை விட்டும் தீங்கைத் தடுக்கும் உதவியாளனையோ அவர்கள் பெறமாட்டார்கள்.