ஸூரா An-Nisa, வசனம் 172

4:172

لَّن يَسۡتَنكِفَ ٱلۡمَسِيحُ أَن يَكُونَ عَبۡدٗا لِّلَّهِ وَلَا ٱلۡمَلَٰٓئِكَةُ ٱلۡمُقَرَّبُونَۚ وَمَن يَسۡتَنكِفۡ عَنۡ عِبَادَتِهِۦ وَيَسۡتَكۡبِرۡ فَسَيَحۡشُرُهُمۡ إِلَيۡهِ جَمِيعٗا ١٧٢

172. ஈஸாவும், சிறப்பு வாய்ந்த வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைப்பற்றி குறைவாகக் கருத மாட்டார்கள். எவர்கள் கர்வம் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் காண்கின்றனரோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன்னிடமே கொண்டுவரச் செய்வான்.

தஃப்ஸீர்

4.172. மர்யமின் மகன் ஈசா அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதற்கு ஒரு போதும் தயங்கமாட்டார். அல்லாஹ் தனக்கு நெருக்கமாக்கி உயர்ந்த பதவிகளை வழங்கிய வானவர்களும் அவனுக்கு அடிமைகளாக இருப்பதற்கு ஒரு போதும் தயங்கமாட்டார்கள். mஅவ்வாறிருக்க ஈசாவை நீங்கள் எவ்வாறு இறைவனாக்கிக் கொண்டீர்கள்? இணைவைப்பாளர்கள் எவ்வாறு வானவர்களை கடவுள்களாக்கிக் கொண்டார்கள்? அல்லாஹ்வை வணங்குவதைவிட்டும் எவர் தவிர்ந்துகொள்கிறாரோ அவர் அறிந்துகொள்ளட்டும், நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்குவான்.