ஸூரா An-Nahl, வசனம் 5

16:5

وَٱلۡأَنۡعَٰمَ خَلَقَهَاۖ لَكُمۡ فِيهَا دِفۡءٞ وَمَنَٰفِعُ وَمِنۡهَا تَأۡكُلُونَ ٥

5. (மனிதர்களே!) கால்நடைகளையும் உங்களுக்காக அவனே படைத்திருக்கிறான். அவற்றில் (குளிரைத் தடுக்கும்) பொருள்களும் பல பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் புசிக்கிறீர்கள்.

தஃப்ஸீர்

16.5. -மக்களே!- ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை அவன் உங்களின் நலன்களுக்காகவே படைத்துள்ளான். அவற்றின் தோல்கள் மற்றும் ரோமங்களின் மூலம் சூட்டைப் பெறுவதும் அந்த நலன்களில் ஒன்றே. அவற்றின் தோல்களிலும், பாலிலும், முதுகுகளிலும் உங்களுக்கு இன்னபிற நலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்தே நீங்கள் உண்ணுகிறீர்கள்.