وَلَكُمۡ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسۡرَحُونَ ٦
6. நீங்கள் அவற்றை (மேய்த்து) மாலையில் ஓட்டி வரும் பொழுதும் (மேய்ச்சலுக்குக்) காலையில் ஓட்டிச் செல்லும்பொழுதும் அவை உங்களுக்கு அழகாய் இருக்கின்றன.
தஃப்ஸீர்
16.6. மாலையில் அவை வரும் போதும் காலையில் மேய்ச்சலுக்காக நீங்கள் அவற்றை ஓட்டிச் செல்லும் போதும் உங்களுக்கு அவற்றில் அலங்காரம் இருக்கின்றது.