وَلِلَّهِۤ يَسۡجُدُۤ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ مِن دَآبَّةٖ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ ٤٩
49. வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்வையே சிரம்பணிந்து வணங்குகின்றனர்.அவர்கள் (இப்லீஸைப் போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை.
தஃப்ஸீர்
16.49. வானங்களிலும் பூமியிலும் உள்ள உயிரினங்கள் யாவும் அல்லாஹ்வுக்கே சிரம்பணிகின்றன. வானவர்கள் அவனுக்கே சிரம்பணிகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வை வணங்கி அவனை வழிப்படுவதை விட்டும் கர்வம் கொள்வதில்லை.