ஸூரா An-Nahl, வசனம் 48

16:48

أَوَلَمۡ يَرَوۡاْ إِلَىٰ مَا خَلَقَ ٱللَّهُ مِن شَيۡءٖ يَتَفَيَّؤُاْ ظِلَٰلُهُۥ عَنِ ٱلۡيَمِينِ وَٱلشَّمَآئِلِ سُجَّدٗا لِّلَّهِ وَهُمۡ دَٰخِرُونَ ٤٨

48. அல்லாஹ் படைத்திருப்பவற்றில் ஒன்றையுமே இவர்கள் பார்க்க வில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும் இடமுமாக சாய்வதெல்லாம் அல்லாஹ்வை மிக்க தாழ்மையாகச் சிரம் பணிந்து வணங்குவதுதான்.

தஃப்ஸீர்

16.48. இந்த பொய்பிப்பவர்கள் அவனுடைய படைப்புகளை ஆய்வுக்கண் கொண்டு பார்க்கவில்லையா? பகலில் சூரியனின் இயக்கத்திற்கேற்பவும் இரவில் சந்திரனின் இயக்கத்திற்கேற்பவும் அவற்றின் நிழல்கள் வலது புறமும் இடது புறமும் சாய்கின்றன; தம் இறைவனுக்கு அடிபணிந்து உண்மையாக சிரம்பணிகின்றன.