إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ١١٥
115. (புசிக்கக் கூடாதென்று) உங்களுக்கு விலக்கப்பட்டிருப்பவை எல்லாம் செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவையும் ஆகும். எவரேனும் பாவம் செய்யும் எண்ணமின்றி, (எவராலும்) நிர்ப்பந்திக்கப்பட்டு (அல்லது பசியின் கொடுமையால் அவசியத்திற்கு அதிகப்படாமல் இவற்றைப் புசித்து)விட்டால் (அவர் மீது குற்றமாகாது. ஆகவே, இத்தகைய நிலைமையில் அவரை) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னித்து மிகக் கருணை காட்டுவான்.
தஃப்ஸீர்
16.115. முறையாக அறுக்கப்படாமல் செத்தவை, வழிந்தோடிய இரத்தம், பன்றியின் அனைத்து உறுப்புகள், அல்லாஹ் அல்லாதவற்றிற்காக பலிகொடுக்கப்பட்டவை ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்கு தடைசெய்துள்ளான். இது விருப்பத் தேர்வு உள்ள சமயத்தில் தடுக்கப்பட்டவையாகும். ஆனால் யாரேனும் மேற்கூறப்பட்டவற்றை நிர்ப்பந்தத்தினால் தடைசெய்யப்பட்டதில் விருப்பமின்றியும், தேவையான அளவை மீறாமலும் உண்டுவிட்டால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பாளன், அவ்வாறு உண்டுவிட்டவர்களை மன்னிக்கக்கூடியவன். அவன் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளன். எனவேதான் நிர்ப்பந்தமான சமயத்தில் அவற்றை அனுமதித்துள்ளான்.