مَن كَفَرَ بِٱللَّهِ مِنۢ بَعۡدِ إِيمَٰنِهِۦٓ إِلَّا مَنۡ أُكۡرِهَ وَقَلۡبُهُۥ مُطۡمَئِنُّۢ بِٱلۡإِيمَٰنِ وَلَٰكِن مَّن شَرَحَ بِٱلۡكُفۡرِ صَدۡرٗا فَعَلَيۡهِمۡ غَضَبٞ مِّنَ ٱللَّهِ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ١٠٦
106. (ஆகவே,) எவரேனும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதன் பின்னர் அவனை நிராகரித்தால் அவனைப் பற்றி கவனிக்கப்படும். அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவருடைய நிர்ப்பந்தத்தினால் அவன் (இப்படி) நிராகரித்தால் அவன் மீது ஒரு குற்றமுமில்லை. எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இப்படி செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
தஃப்ஸீர்
16.106. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்ட பிறகு அவனை நிராகரிப்பவர்கள் (இரு வகையினராக இருக்கின்றனர். ஒரு வகையினர்) அவர்களின் உள்ளங்கள் நம்பிக்கையில் உறுதியாக உள்ள நிலையில் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு தன் நாவினால் நிராகரிப்பின் வார்த்தையைக் கூறியவர்கள். (இரண்டாவது வகையினர்) நம்பிக்கையை விட நிராகரிப்பை மனதார ஏற்று அதனை மொழிந்தவர். அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர். அவர் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவருக்கு கடுமையான வேதனை உண்டு.