كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ ٤٦
46. (இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்.
தஃப்ஸீர்
77.46. மறுப்பாளர்களிடம் கூறப்படும்: “உலகில் குறுகிய காலம்வரை உண்ணுங்கள். வாழ்வின் இன்பங்களை அனுபவியுங்கள். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களை பொய்யாக்கியதனால் குற்றவாளிகளாக இருக்கின்றீர்கள்.