ஸூரா Al-Mujadilah, வசனம் 10

58:10

إِنَّمَا ٱلنَّجۡوَىٰ مِنَ ٱلشَّيۡطَٰنِ لِيَحۡزُنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَيۡسَ بِضَآرِّهِمۡ شَيۡـًٔا إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ١٠

10. (அவர்களை) ஷைத்தான் இரகசியமாகப் பேச வைப்பதெல்லாம், நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கவலையை உண்டுபண்ணுவதற்காகவே. அல்லாஹ்வுடைய நாட்டமின்றி, அவர்களுக்கு அது (-இரகசியம்) அறவே தீங்கிழைக்காது. ஆகவே, நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே நம்பியிருக்கவும்.

தஃப்ஸீர்

58.10. நிச்சயமாக பாவமான காரியங்களை, வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் போன்றவற்றை உள்ளடக்கி இரகசியம் பேசுவது ஷைத்தான் தன் தோழர்களுக்கு காட்டும் அலங்காரமும் அவன் ஏற்படுத்தும் ஊசலாட்டமுமாகும். இதன் மூலம் நம்பிக்கையாளர்கள் தமக்கு சூழ்ச்சி செய்யப்படுவதாக நினைத்து கவலையை நுழைவிக்க வேண்டுமென்பதையே ஷைத்தான் விரும்புகிறான். அல்லாஹ்வின் அனுமதியின்றி ஷைத்தானும் அவனது அலங்காரமும் நம்பிக்கையாளர்களுக்கு எந்த தீங்கும் இழைத்துவிட முடியாது. நம்பிக்கையாளர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.