ஸூரா Al-Ma'idah, வசனம் 9

5:9

وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٌ عَظِيمٞ ٩

9. எவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு பாவமன்னிப்பும், மகத்தான (நற்) கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.

தஃப்ஸீர்

5.9. தான் அளித்த வாக்குறுதிக்கு மாறுசெய்யாத அல்லாஹ் தன் மீதும் தன் தூதர்கள் மீதும் நம்பிக்கைகொண்டு நற்காரியம் புரிந்தவர்களின் பாவங்களை மன்னித்துவிடுவதாகவும் அவர்களுக்கு சுவனம் என்னும் மகத்தான கூலியைத் தருவதாகவும் வாக்களிக்கிறான்.