ஸூரா Al-Ma'idah, வசனம் 105

5:105

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ عَلَيۡكُمۡ أَنفُسَكُمۡۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا ٱهۡتَدَيۡتُمۡۚ إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ١٠٥

105. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்துவிடுவான்.

தஃப்ஸீர்

5.105. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றி, அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்; உங்களை நீங்கள் சீர்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழியில் இருந்தால் மக்களின் வழிகேட்டால் உங்களுக்குத் தீங்கு நேராது. நீங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளிகள் அல்ல. நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நீங்களை நேர்வழியில் இருப்பதற்கான அடையாளமேயாகும். மறுமைநாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்ப வேண்டும். இவ்வுலகில் நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.