ஸூரா Al-Isra, வசனம் 65

17:65

إِنَّ عِبَادِي لَيۡسَ لَكَ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٞۚ وَكَفَىٰ بِرَبِّكَ وَكِيلٗا ٦٥

65. நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை'' (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உமது இறைவ(னாகிய நா)னே போதுமானவன்.

தஃப்ஸீர்

17.65. -இப்லீஸே!- என் மீது நம்பிக்கைகொண்டு எனக்குக் கட்டுப்பட்ட, அமல் செய்த அடியார்கள் மீது உன் ஆதிக்கம் செல்லுபடியாகாது.” ஏனெனில் அல்லாஹ் அவர்களை விட்டும் உனது தீங்கை தடுத்து விடுகிறான். தம்முடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.