ஸூரா Al-Imran, வசனம் 61

3:61

فَمَنۡ حَآجَّكَ فِيهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ فَقُلۡ تَعَالَوۡاْ نَدۡعُ أَبۡنَآءَنَا وَأَبۡنَآءَكُمۡ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمۡ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمۡ ثُمَّ نَبۡتَهِلۡ فَنَجۡعَل لَّعۡنَتَ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰذِبِينَ ٦١

61. (நபியே!) இதைப் பற்றி உமக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உம்மிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) கூறுவீராக: ‘‘வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக் கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்'' (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இப்படி சத்தியம் செய்ய முன்வரவில்லை.)

தஃப்ஸீர்

3.61. தூதரே! உம்மிடம் ஈசாவைக்குறித்து சரியான அறிவு வந்தபின்னரும் அவர் அல்லாஹ்வின் அடியார் இல்லை என்று உம்மிடம் வாதம் செய்யும் நஜ்ரான் பிரதேசத்தைச் சேர்ந்த கிறித்தவர்களிடம் நீர் கூறும்: “வாருங்கள், எங்களின் பிள்ளைகளையும் உங்களின் பிள்ளைகளையும், எங்களின் பெண்களையும் உங்களின் பெண்களையும், எங்களின் உயிர்களையும் உங்களின் உயிர்களையும் அழைத்து, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து எங்களிலும் உங்களிலுமுள்ள பொய்யர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று அவனிடம் மன்றாடி பிரார்த்தனை செய்வோம்.