هُوَ ٱلَّذِي يُنَزِّلُ عَلَىٰ عَبۡدِهِۦٓ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ لِّيُخۡرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَإِنَّ ٱللَّهَ بِكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٞ ٩
9. உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைத்திருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.
தஃப்ஸீர்
57.9. உங்களை நிராகரிப்பு, அறியாமை என்னும் இருள்களிலிருந்து வெளியேற்றி ஈமான், அறிவு என்னும் ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக அவனே தன் அடியார் முஹம்மதுமீது தெளிவான சான்றுகளை இறக்குகிறான். நிச்சயமாக அல்லாஹ் தன் தூதரை நேர்வழிகாட்டக்கூடியவராகவும் நற்செய்தி கூறக்கூடியவராகவும் உங்களின்பால் அனுப்பி உங்களோடு மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.