وَقَالُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ مَلَكٞۖ وَلَوۡ أَنزَلۡنَا مَلَكٗا لَّقُضِيَ ٱلۡأَمۡرُ ثُمَّ لَا يُنظَرُونَ ٨
8. (‘‘இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சி சொல்வதற்கு) அவருக்காக ஒரு வானவர் அனுப்பப்பட வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்கள் விரும்புகிறபடி) நாம் ஒரு வானவரை அனுப்பி வைத்திருந்தால், (அவர்களின்) காரியம் முடிவு பெற்றிருக்கும். பிறகு, (அதில்) அவர்களுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. (உடனே அவர்கள் அழிந்திருப்பார்கள்.)
தஃப்ஸீர்
6.8. இந்த நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் முஹம்மதுடன் ஒரு வானவரை அனுப்பி அவர், இவர் தூதர்தான் என்று எங்களிடம் கூறினால் நாங்கள் நம்பிக்கைகொள்வோம்”. அவர்கள் கூறியவாறு நாம் ஒரு வானவரை அனுப்பி, அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையெனில் அவர்களை அழித்துவிடுவோம். வானவர் வந்துவிட்டால் பாவமன்னிப்புக்கான அவகாசம் தரப்படாது.