ஸூரா Al-An'am, வசனம் 7

6:7

وَلَوۡ نَزَّلۡنَا عَلَيۡكَ كِتَٰبٗا فِي قِرۡطَاسٖ فَلَمَسُوهُ بِأَيۡدِيهِمۡ لَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ ٧

7. கடிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கிவைத்து அதை அவர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும் ‘‘இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் நிச்சயம் கூறுவார்கள்.

தஃப்ஸீர்

6.7. தூதரே! காகிதங்களில் எழுதப்பட்ட புத்தகத்தை நாம் உம்மீது இறக்கி அதனை அவர்கள் கண்ணால் பார்த்து கைகளால் தொட்டு உறுதிப்படுத்திக் கொண்டாலும் கூட, பிடிவாதத்தினாலும் கர்வத்தினாலும் அவர்கள் அதனை நம்பிக்கைக் கொள்ளமாட்டார்கள். மாறாக “நீர் கொண்டுவந்தது தெளிவான சூனியமே. எனவே நாங்கள் உம்மீது நம்பிக்கை கொள்ளமாட்டோம்” என்றுதான் அவர்கள் கூறுவார்கள்.