قُل لَّآ أَقُولُ لَكُمۡ عِندِي خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ وَلَآ أَقُولُ لَكُمۡ إِنِّي مَلَكٌۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّۚ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُۚ أَفَلَا تَتَفَكَّرُونَ ٥٠
50. (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு வானவர் என்று நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கப்பட்டவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை'' என்று கூறி, ‘‘குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'' என்றும் கேட்பீராக.
தஃப்ஸீர்
6.50. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் விரும்பியபடி செலவு செய்யும் விதத்தில் வாழ்வாதாரத்தின் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் இருப்பதாக நான் உங்களிடம் கூற மாட்டேன். அல்லாஹ் எனக்கு அறிவித்த வஹியைத் தவிர மறைவானவற்றை நான் அறிவேன் என்றோ நான் வானவர் என்றோ கூறமாட்டேன். நான் அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எனக்கு வஹியாக அறிவிப்பதையே பின்பற்றுகிறேன். என்னிடம் இல்லாதவற்றை இருப்பதாக வாதிடமாட்டேன்.” தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: “சத்தியத்தைக் கண்டுகொள்ளாத நிராகரிப்பாளனும் சத்தியத்தைக் கண்டுகொண்ட நம்பிக்கையாளனும் சமமாவார்களா? இணைவைப்பாளர்களே! உங்களைச் சுற்றியிருக்கும் சான்றுகளை சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா?