وَمَا نُرۡسِلُ ٱلۡمُرۡسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَۖ فَمَنۡ ءَامَنَ وَأَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٤٨
48. (நன்மையைக் கொண்டு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீமையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே தவிர, (நம்) தூதர்களை நாம் அனுப்பவில்லை. ஆகவே, எவர்கள் (இந்நபியை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்கிறார்களோ, அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
தஃப்ஸீர்
6.48. நாம் தூதர்களை அனுப்பவதெல்லாம் நம்பிக்கைகொண்டு கீழ்ப்படிந்தவர்களுக்கு என்றும் முடிவுறாத நிலையான அருட்கொடைகள் உண்டு என்று நற்செய்தி கூறுவதற்காகவும் நிராகரிப்பாளர்களுக்கும் பாவிகளுக்கும் நம்முடைய கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்வதற்காகவும்தான். தூதர்கள் மீது நம்பிக்கைகொண்டு தம் செயலைச் சீர்படுத்திக் கொண்டவர்கள் மறுமைநாளில் நிகழக்கூடியதை எண்ணி அச்சம் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இழந்த உலக பாக்கியங்களை எண்ணி கவலைகொள்ளவோ கைசேப்படவோ மாட்டார்கள்.