وَتَمَّتۡ كَلِمَتُ رَبِّكَ صِدۡقٗا وَعَدۡلٗاۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ١١٥
115. (நபியே!) உமது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகி விட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன்.
தஃப்ஸீர்
6.115. உம் இறைவனின் வாக்கான குர்ஆன் உண்மையிலும் நீதியிலும் முழுமையடைந்துவிட்டது. அவனுடைய வார்த்தைகளை மாற்றக்கூடியவர் யாரும் இல்லை. அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.