أَفَغَيۡرَ ٱللَّهِ أَبۡتَغِي حَكَمٗا وَهُوَ ٱلَّذِيٓ أَنزَلَ إِلَيۡكُمُ ٱلۡكِتَٰبَ مُفَصَّلٗاۚ وَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡلَمُونَ أَنَّهُۥ مُنَزَّلٞ مِّن رَّبِّكَ بِٱلۡحَقِّۖ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ ١١٤
114. ‘‘அல்லாஹ்வைத் தவிர மற்றவரையா (எங்களுக்கும் உங்களுக்கும் இடையில்) தீர்ப்பளிக்கும் அதிபதியாக நான் எடுத்துக்கொள்வேன்? அவன்தான் எல்லா விபரங்களுமுள்ள இவ்வேதத்தை உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்'' (என்று நபியே! நீர் கூறுவீராக. இதற்கு முன்னர்) எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள், இது மெய்யாகவே உமது இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே அருளப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிவார்கள். ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீரும் ஒருவராக ஒருபோதும் ஆகிவிடவேண்டாம்.
தஃப்ஸீர்
6.114. தூதரே! அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் சேர்த்து வணங்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை எனக்கும் உங்களுக்குமிடைய தீர்ப்பாளனாக ஏற்றுக்கொள்வது எவ்வாறு சாத்தியம்? அவன்தான் உங்கள் மீது எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி தெளிவுபடுத்தக்கூடிய குர்ஆனை இறக்கியுள்ளான். தவ்ராத் என்னும் வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களின் வேதங்களில் காணப்படும் ஆதாரங்களினால் குர்ஆன் சத்தியத்தைப் பொதிந்ததாக உமக்கு அல்லாஹ்விடமிருந்து இறக்கப்படுகிறது என்பதை அறிவார்கள். நாம் உமக்கு அறிவித்தவற்றில் சந்தேகம் கொள்வோரில் ஆகிவிடாதீர்.