Rabbi zidni 'ilma

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۗ وَلَا تَعۡجَلۡ بِٱلۡقُرۡءَانِ مِن قَبۡلِ أَن يُقۡضَىٰٓ إِلَيۡكَ وَحۡيُهُۥۖ وَقُل رَّبِّ زِدۡنِي عِلۡمٗا ١١٤

114. உண்மையான அரசனாகிய அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனைப் பற்றி உமக்கு வஹ்யி அறிவித்து முடிவதற்கு முன்னதாகவே (அதை ஓத) நீர் அவசரப்படாதீர். ‘‘என் இறைவனே! என் கல்வி ஞானத்தை மேலும் அதிகப்படுத்து'' என்று நீர் பிரார்த்தனை செய்வீராக.

தஃப்ஸீர்

20.114. அல்லாஹ் மிக உயர்ந்தவன். புனிதமானவன், மகத்துவமானவன். அனைத்துக்கும் உரிமையாளனான ஆட்சியாளன். அவன் உண்மையானவன். அவனுடைய வார்த்தையே உண்மையானது. இணைவைப்பாளர்கள் வர்ணிக்கும் பண்புகளைவிட்டும் அவன் மிக உயர்ந்தவன். -தூதரே!- ஜிப்ரீல் உமக்குக் குர்ஆனை எடுத்துரைத்து முடிப்பதற்கு முன்னரே அவருடன் சேர்ந்து விரைவாக ஓதுவதற்கு முயற்சி செய்யாதீர். “இறைவா! நீ எனக்குக் கற்றுக் கொடுத்த கல்வியுடன் இன்னும் கல்வியை அதிகப்படுத்துவாயாக” என்று கூறுவீராக.

ஸூரா Taha முழுவதையும் ஓதுங்கள்

கேள்விகள்

Rabbi zidni 'ilma குர்ஆனில் எங்கே உள்ளது?

Rabbi zidni 'ilma ஸூரா Taha, 20:114 இல் உள்ளது.