ஸூரா Ghafir, வசனம் 19

40:19

يَعۡلَمُ خَآئِنَةَ ٱلۡأَعۡيُنِ وَمَا تُخۡفِي ٱلصُّدُورُ ١٩

19. (மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்கள் மறைப்பவற்றையும் அல்லாஹ் நன்கறிவான்.

தஃப்ஸீர்

40.19. அல்லாஹ், பார்ப்பவர்களின் கண்களை விட்டும் மறைவாகச் செய்யும் திருட்டுத்தனங்களையும் உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அறிகிறான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.