أَلَا تُقَٰتِلُونَ قَوۡمٗا نَّكَثُوٓاْ أَيۡمَٰنَهُمۡ وَهَمُّواْ بِإِخۡرَاجِ ٱلرَّسُولِ وَهُم بَدَءُوكُمۡ أَوَّلَ مَرَّةٍۚ أَتَخۡشَوۡنَهُمۡۚ فَٱللَّهُ أَحَقُّ أَن تَخۡشَوۡهُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ١٣
13. தங்கள் சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் விரும்பி (அதற்காக) முயற்சித்த மக்களிடம் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர். அவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் பயப்படத் தகுதியானவன் அல்லாஹ் (ஒருவன்)தான்.
தஃப்ஸீர்
9.13. -நம்பிக்கையாளர்களே!- தங்களின் ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் மீறியோருடன் நீங்கள் ஏன் போரிடக் கூடாது? அவர்கள் ‘தாருன் நத்வா’ என்னும் சபையிலே ஒன்றுகூடி தூதரை மக்காவிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டார்கள். அவர்கள்தாம் தூதரின் அணியில் இருக்கின்ற குசாஆ குலத்தாருக்கு எதிராக குறைஷிகளின் அணியில் இருக்கின்ற பக்ர் குலத்தாருக்கு உதவி செய்து போரைத் தொடங்கினார்கள். நீங்கள் அவர்களுக்குப் பயந்து அவர்களுடன் போரிடவில்லையா? நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நீங்கள் அஞ்சுவதற்குத் தகுதியானவன்.