وَإِن نَّكَثُوٓاْ أَيۡمَٰنَهُم مِّنۢ بَعۡدِ عَهۡدِهِمۡ وَطَعَنُواْ فِي دِينِكُمۡ فَقَٰتِلُوٓاْ أَئِمَّةَ ٱلۡكُفۡرِ إِنَّهُمۡ لَآ أَيۡمَٰنَ لَهُمۡ لَعَلَّهُمۡ يَنتَهُونَ ١٢
12. (சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்டதன் பின்னரும், அவர்கள் தங்கள் சத்தியங்களை முறித்து உங்கள் மார்க்கத்தைப் பற்றியும் தவறான குற்றங்குறைகள் கூறிக்கொண்டிருந்தால், நிச்சயமாக நிராகரிக்கும் (இத்தகைய) மக்களின் வாக்குறுதிகள் முறிந்துவிட்டன. ஆகவே, (இத்தகைய விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொள்வதற்காக நீங்கள் நிராகரிப்பை உடைய (அந்த) தலைவர்களிடம் போர் புரியுங்கள்.
தஃப்ஸீர்
9.12. நீங்கள் குறிப்பிட்ட காலம் வரை போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப்பாளர்கள் தங்களின் ஒப்பந்தத்தை மீறி, உங்களின் மார்க்கத்தைக் குறைகூறினால் நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள்தாம் நிராகரிப்பின் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் அவர்களின் உயிர்களைப் பாதுகாக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. தங்களின் நிராகரிப்பிலிருந்தும் ஒப்பந்தங்களை மீறுவதிலிருந்தும் மார்க்கத்தைக் குறை கூறுவதிலிருந்தும் அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு அவர்களுடன் போரிடுங்கள்.