وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٩
29. எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள்.
தஃப்ஸீர்
81.29. படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் நேர்வழியில் செல்லவோ, இன்னபிற வழிகளில் செல்லவோ உங்களால் நாட முடியாது.