وَأُخۡرَىٰ تُحِبُّونَهَاۖ نَصۡرٞ مِّنَ ٱللَّهِ وَفَتۡحٞ قَرِيبٞۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ ١٣
13. நீங்கள் விரும்பக்கூடிய மற்றொன்றும் உண்டு. அது அல்லாஹ்வுடைய உதவியும், சமீபத்தில் கிடைக்கக் கூடிய ஒரு வெற்றியும். (ஆகவே, நபியே! இதைக் கொண்டு) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
தஃப்ஸீர்
61.13. இந்த வியாபாரத்தின் மற்றுமொரு இலாபமான பண்புதான் நீங்கள் விரும்பும் மற்றொரு விடயமுமாகும். அது இவ்வுலகிலேயே கிடைத்துவிடக் கூடியதாகும். உங்களின் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் உதவியும் மக்கா வெற்றி மற்றும் அதுவல்லாத அவன் வழங்கும் அண்மையிலுள்ள வெற்றிகளுமே அவை. -தூதரே!- நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகில் வெற்றியையும் மறுவுலகில் சுவன வெற்றியையும் கொண்டு நற்செய்தி கூறுவீராக.