إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِتَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ بِمَآ أَرَىٰكَ ٱللَّهُۚ وَلَا تَكُن لِّلۡخَآئِنِينَ خَصِيمٗا ١٠٥
105. (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கினோம். (ஆகவே,) நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக இருக்காதீர்!.
தஃப்ஸீர்
4.105. தூதரே! சத்தியத்தை உள்ளடக்கியுள்ள குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம், மக்களின் ஒவ்வொரு விவகாரங்களிலும் அல்லாஹ் உமக்குக் கற்றுத்தந்தபடி - உம் மனஇச்சைப்படியோ சுயஅறிவின்படியோ அல்ல - நீர் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக. தமக்குத் தாமே துரோகம் செய்து, நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றில் மோசடி செய்பவர்களிடத்தில் தமது உரிமையைக் கேட்போரைத் தடுத்து வாதாடுபவராக ஆகிவிடாதீர்.