ஸூரா An-Nahl, வசனம் 27

16:27

ثُمَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يُخۡزِيهِمۡ وَيَقُولُ أَيۡنَ شُرَكَآءِيَ ٱلَّذِينَ كُنتُمۡ تُشَٰٓقُّونَ فِيهِمۡۚ قَالَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ إِنَّ ٱلۡخِزۡيَ ٱلۡيَوۡمَ وَٱلسُّوٓءَ عَلَى ٱلۡكَٰفِرِينَ ٢٧

27. பின்னர், மறுமை நாளிலோ அவன் அவர்களை இழிவுபடுத்தி ‘‘நீங்கள் (உங்கள் தெய்வங்களை) எனக்கு இணையானவை என(க் கூறி நம்பிக்கையாளர்களுடன்) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?'' என்று கேட்பான். அச்சமயம் (இதை) அறிந்திருந்த (நம்பிக்கை கொண்ட)வர்கள் ‘‘இன்றைய தினம் இழிவும், வேதனையும் நிச்சயமாக நிராகரித்தவர்கள்மீதுதான்'' என்று கூறுவார்கள்.

தஃப்ஸீர்

16.27. பின்னர் மறுமை நாளில் அல்லாஹ் அவர்களை வேதனையால் இழிவுபடுத்துவான். அவன் அவர்களிடம் கேட்பான்: “நீங்கள் வணக்கத்தில் எனக்கு இணையாக்கிக் கொண்டிருந்த எனக்கு நிகரானவர்கள் எங்கே? அவற்றினால்தானே என் தூதர்களையும் நம்பிக்கையாளர்களையும் எதிர்த்துக் கொண்டிருந்தீர்கள்?” இறைவனுக்குக் கட்டுப்பட்ட அறிஞர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக மறுமை நாளில் இழிவும் வேதனையும் நிராகரிப்பாளர்களைத் தாக்கியே தீரும்.”