يُنَزِّلُ ٱلۡمَلَٰٓئِكَةَ بِٱلرُّوحِ مِنۡ أَمۡرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦٓ أَنۡ أَنذِرُوٓاْ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱتَّقُونِ ٢
2. அவன் வானவர்களுக்கு வஹ்யி கொடுத்து, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களிடம் அனுப்பி வைத்து ‘‘வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறெவனுமில்லை; நீங்கள் எனக்கே பயப்படுங்கள்'' என்று எச்சரிக்கை செய்யுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
தஃப்ஸீர்
16.2. -“தூதர்களே!- அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்யுங்கள். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை" என வஹியைக் கொடுத்து வானவர்களை தான் நாடிய தூதர்கள் மீது அல்லாஹ் இறக்குகிறான். எனவே -மனிதர்களே!- என் கட்டளைகளைச் செயல்படுத்தி, நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னை அஞ்சுங்கள்.”