ஸூரா Al-Mutaffifin, வசனம் 23

83:23

عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٢٣

23. உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்த வண்ணம் சொர்க்கத்தின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

தஃப்ஸீர்

83.23. அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீதமர்ந்து தங்கள் இறைவனின் பக்கமும் தங்கள் மனம் விரும்புவதன், சந்தோசப்படுவதன் பக்கமும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.