يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡخَمۡرُ وَٱلۡمَيۡسِرُ وَٱلۡأَنصَابُ وَٱلۡأَزۡلَٰمُ رِجۡسٞ مِّنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِ فَٱجۡتَنِبُوهُ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ٩٠
90. நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறி கேட்பது ஆகிய இவை ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவற்றில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
தஃப்ஸீர்
5.90. அல்லாஹ்வை நம்பியவர்களே! அறிவை மழுங்கடிக்கும் மதுவும் இருதரப்பும் பணயம் வைத்து ஆடுகின்ற சூதாட்டமும் இணைவைப்பாளர்கள் புனிதமாகக் கருதி பலிபீடத்திற்காக அல்லது வணங்குவதற்காக நட்டுவைத்திருக்கும் கல்லும் அவர்களுக்காக மறைவில் பங்குவைக்கப்பட்டிருப்பதை அறிவதற்காக பயன்படுத்தப்படும் அம்பும் ஷைத்தான் அழகுபடுத்தியுள்ள பாவமான செயல்களாகும். எனவே அவற்றிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். இவ்வுலகில் கண்ணியமான வாழ்வையும் மறுமையில் சுவன இன்பத்தையும் அடைவீர்கள்.