ஸூரா Al-Ma'idah, வசனம் 51

5:51

۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلۡيَهُودَ وَٱلنَّصَٰرَىٰٓ أَوۡلِيَآءَۘ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَإِنَّهُۥ مِنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ٥١

51. நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்த மாட்டான்.

தஃப்ஸீர்

5.51. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். யூதர்களும் கிருஸ்தவர்களும் தமது மார்க்கத்தைச் சார்ந்தவர்களைத்தான் உற்ற தோழர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். இருபிரிவினரும் உங்களை எதிர்ப்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். உங்களில் அவர்களுடன் நட்புகொள்பவர் அவர்களைச் சார்ந்தவர்தாம். நிராகரிப்பாளர்களுடன் நட்புகொள்ளும் அநியாயக்கார மக்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.