ஸூரா Al-Ma'idah, வசனம் 21

5:21

يَٰقَوۡمِ ٱدۡخُلُواْ ٱلۡأَرۡضَ ٱلۡمُقَدَّسَةَ ٱلَّتِي كَتَبَ ٱللَّهُ لَكُمۡ وَلَا تَرۡتَدُّواْ عَلَىٰٓ أَدۡبَارِكُمۡ فَتَنقَلِبُواْ خَٰسِرِينَ ٢١

21. (தவிர, அவர்) ‘‘என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (இருக்கும் உங்கள் எதிரியுடன் போர் புரிந்து அதில்) நுழையுங்கள். (அவர்களுக்கு) நீங்கள் புறங்காட்டித் திரும்பாதீர்கள். (புறம் காட்டினால்) நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்'' (என்றும் கூறினார்.)

தஃப்ஸீர்

5.21. மூஸா கூறினார்: “எனது கூட்டமே! புனித பூமியில் (பைத்துல் முகத்தசும் அதைச் சுற்றியுள்ள பகுதியில்) நுழையுங்கள். அங்கு நுழைவீர்கள், அங்கிருக்கும் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவீர்கள் என்பதையும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்துள்ளான். அநியாயக்காரர்களுக்கு முன்னால் புறங்காட்டி ஓடிவிடாதீர்கள். இல்லாவிட்டால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீங்கள் இழப்பையே சந்திப்பீர்கள்.”