وَلَا يَأۡمُرَكُمۡ أَن تَتَّخِذُواْ ٱلۡمَلَٰٓئِكَةَ وَٱلنَّبِيِّـۧنَ أَرۡبَابًاۚ أَيَأۡمُرُكُم بِٱلۡكُفۡرِ بَعۡدَ إِذۡ أَنتُم مُّسۡلِمُونَ ٨٠
80. தவிர ‘‘வானவர்களையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றும் அவர் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் என்னே! இறைவன் ஒருவனையே நீங்கள் அங்கீகரித்த பின்னர் (அவனை) நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா?
தஃப்ஸீர்
3.80. அதேபோன்று “அல்லாஹ்வை விடுத்து வானவர்களையும் தூதர்களையும் வணங்கப்படும் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்றும் அவர் உங்களை ஏவுவது அவருக்குத் தகுந்ததல்ல. நீங்கள் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட பிறகு அவனை நிராகரிக்கும்படி உங்களை ஏவுவது ஆகுமாகுமா?