إِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ٥١
51. நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்றும் கூறினார்.)
தஃப்ஸீர்
3.51. இது ஏனெனில் அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். அவன்தான் கீழ்ப்படிவதற்கும் அஞ்சுவதற்கும் தகுதியானவன். எனவே அவனை மட்டுமே வணங்குங்கள். அல்லாஹ்வை வணங்குதல்,அவனை அஞ்சுதல் ஆகிய நான் உங்களுக்குக் கட்டளையிட்டவைகளே எவ்வித கோணலுமற்ற நேரான பாதையாகும்.