ஸூரா Al-Hadid, வசனம் 24

57:24

ٱلَّذِينَ يَبۡخَلُونَ وَيَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبُخۡلِۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ ٢٤

24. எவர்கள் கஞ்சத்தனம் செய்து, மற்ற மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டுகிறார்களோ (அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளைகளை) எவன் புறக்கணிக்கிறானோ (அது அவனுக்குத்தான் நஷ்டத்தை உண்டுபண்ணும். அல்லாஹ்வுக்கு ஒரு நஷ்டமும் ஏற்படாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்தான் பெரும் சீமான், பெரும் புகழுடையவன் ஆவான்.

தஃப்ஸீர்

57.24. கட்டாயமாக செலவழிக்க வேண்டியதை செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து மற்றவர்களையும் கஞ்சத்தனம் செய்யுமாறு ஏவுவபர்கள் நஷ்டமடைபவர்களாவர். யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் புறக்கணிக்கிறாரோ அவர் அவனுக்கு எந்த தீங்கும் இழைத்துவிட முடியாது. நிச்சயமாக அவர் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறார். நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனாவான். அவன் தன் அடியார்களின் அடிபணிதலின்பால் தேவையுடையவன் அல்ல. அவன் எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவனாவான்.