ஸூரா Al-Hadid, வசனம் 23

57:23

لِّكَيۡلَا تَأۡسَوۡاْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا تَفۡرَحُواْ بِمَآ ءَاتَىٰكُمۡۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخۡتَالٖ فَخُورٍ ٢٣

23. உங்களை விட்டும் தவறிப்போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதை உங்களுக்கு அறிவிக்கிறான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை.

தஃப்ஸீர்

57.23. -மனிதர்களே!- இது நீங்கள் இழந்தவற்றை எண்ணி கவலை கொள்ளாமல் இருப்பதற்காகவும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளைக் கொண்டு கர்வம் கொள்ளாமல் சந்தோசமாக இருப்பதற்காகவும்தான். நிச்சயமாக அல்லாஹ் தான் வழங்கியவற்றைக் கொண்டு மக்களிடம் கர்வம்கொள்ளக்கூடிய எவரையும் நேசிப்பதில்லை.