ஸூரா Al-Hadid, வசனம் 22

57:22

مَآ أَصَابَ مِن مُّصِيبَةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِيٓ أَنفُسِكُمۡ إِلَّا فِي كِتَٰبٖ مِّن قَبۡلِ أَن نَّبۡرَأَهَآۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ٢٢

22. (பொதுவாக) பூமியிலோ அல்லது (குறிப்பாக) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தச் சிரமமும், (நஷ்டமும்) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே!

தஃப்ஸீர்

57.22. பூமியில் ஏற்படுகின்ற வரட்சியும் மற்றவைகளும் உங்களுக்கு ஏற்படுகின்ற துன்பம் ஒவ்வொன்றும், நாம் படைப்புகளை படைப்பதற்கு முன்னரே லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது.