وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا تَعۡضُلُوهُنَّ أَن يَنكِحۡنَ أَزۡوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوۡاْ بَيۡنَهُم بِٱلۡمَعۡرُوفِۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمۡ يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۗ ذَٰلِكُمۡ أَزۡكَىٰ لَكُمۡ وَأَطۡهَرُۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ ٢٣٢
232. நீங்கள் ‘தலாக்' கூறிய பெண்கள், தங்கள் (இத்தாவின்) தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர், அவர்கள் தங்கள் (முந்திய) கணவன்மார்களை (அல்லது தாங்கள் விரும்புகின்ற வேறு ஆண்களை) ஒழுங்கான முறையில் திருமணம் செய்வதை தடுக்காதீர்கள் (திருமணம் செய்து கொள்ள விரும்பும்) அவர்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றவரை திருப்தி கொண்டால். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும், மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. (இதிலுள்ள நன்மைகளை) அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
தஃப்ஸீர்
2.232. கணவர்கள் மனைவியரை மூன்றுமுறைக்கு குறைவாக விவாகரத்து அளித்து, மனைவியர் தங்களின் தவணையை நிறைவுசெய்துவிட்டால் - பொறுப்பாளர்களே! அவர்கள் மீண்டும் தம் கணவர்களோடு புதிதாக மணமுடித்துக் கொள்வதை விரும்பினால் அவர்களைத் தடுக்காதீர்கள். உங்களில் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களுக்கு அவர்களைத் தடுப்பது கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. இதுதான் உங்களிடையே நன்மைகளை அதிகமாக வளர்த்தெடுக்கும். உங்களின் மானத்தையும் செயல்களையும் அழுக்குகளிலிருந்து பாதுகாத்து தூய்மைப்படுத்தும். விஷயங்களின் உண்மை நிலையையும் பின்விளைவுகளையும் அல்லாஹ் நன்கறிவான். அவற்றை நீங்கள் அறியமாட்டீர்கள்.