ஸூரா Al-Baqarah, வசனம் 207

2:207

وَمِنَ ٱلنَّاسِ مَن يَشۡرِي نَفۡسَهُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِۚ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ ٢٠٧

207. அல்லாஹ்வின் (திருப்)பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் இறக்கமுடையவன் .

தஃப்ஸீர்

2.207. மனிதர்களில் நம்பிக்கைகொண்ட சிலர் தனது இறைவனுக்குக் கட்டுப்பட்டு, அவனுடைய பாதையில் ஜிஹாது செய்தவாறு, அவனுடைய திருப்தியைத் தேடியவாறு தம் உயிரை வழங்குகின்றார்கள். அல்லாஹ் தன் அடியார்களின் விஷயத்தில் மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.