ஸூரா Al-Baqarah, வசனம் 170

2:170

وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ بَلۡ نَتَّبِعُ مَآ أَلۡفَيۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡقِلُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ ١٧٠

170. மேலும், அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் (அவர்கள்) “இல்லை, எவற்றின் மீது எங்கள் மூதாதைகள் (இருந்து, அவர்கள் எவற்றைச் செய்து கொண்டு) இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்!)

தஃப்ஸீர்

2.170. இந்த நிராகரிப்பாளர்களிடம்:அல்லாஹ் இறக்கிய வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டால், "எங்கள் முன்னோர்களின் கொள்கைகளையும் பழக்கவழக்கங்களையும்தான் பின்பற்றுவோம்" என்று பிடிவாதத்துடன் கூறுகிறார்கள். அந்த முன்னோர்கள் நேர்வழியைக் குறித்து எதுவும் அறியாதவர்களாகவும், அல்லாஹ் விரும்பும் சத்தியத்தை அடைய முடியாதவர்களாகவும் இருந்தாலும் அவர்களைப் பின்பற்றுவார்களா என்ன?